Tuesday, February 17, 2026 1:24 pm
யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் காணி பிணக்கு காரணமாக 59 வயதான இரு பிள்ளைகளின் தந்தை நேற்று திங்கட்கிழமை மாலை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த நபர் நேற்று மாலை தனது தோட்டக்காணிக்கு நீர் பாச்கிக் கொண்டிருந்த சமயம் அருகில் இருந்த வீட்டு நபர்கள் காணி பிரச்சனை தொடர்பில் முரண்பட்டுள்ளனர்.
முரண்பாடு முற்றிய நிலையில் மண் வெட்டியால் குறித்த நபர் மீது தாக்கியதில் பிடரி பகுதியில் இரத்தம் வழிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலையாளிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

