நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரையில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) முதலில் 7 ரிக்டர் அளவில் இருந்ததாக அறிவித்தது, ஆனால் பின்னர் அதை 6.8 ஆக திருத்தியது.
தற்பொழுது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியே ஓடிவந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.