கனடாவில் ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என பிரதமர் மார்க் கார்னி, அறிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த ‘நியாயமற்ற’ வரிகளால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு வலிமையான ஆணையைப் பெறுவதற்காக இந்த தேர்தல் என அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் வரிகளை கனடா சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும், இதுபோன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து கனேடியர்கள் தேர்வு செய்யத் தகுதியானவர்கள் என்றும் கார்னி கூறினார்.
முன்னதாக ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் தான் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற இருந்தது.
ஆனால் 60 வயதான கார்னி, லிபரல் கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயல்வதால் இந்த முன்கூட்டிய தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.
அதே நேரத்தில் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை எதிர்க்கும் தலைவரின் தேவையும் கனடாவிற்கு உள்ளது.