காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதல்களில் பாலஸ்தீன இறப்பு எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியுள்ளதாக காஸாவைத் தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 41 உடல்களும் 61 காயமடைந்தவர்களும் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 50,021 ஆக உயர்ந்துள்ளது, 2023 அக்டோபர் தொடக்கத்தில் சண்டை வெடித்ததில் இருந்து 113,274 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 18 ஆம் திகதி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, குறைந்தது 673 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.1,233 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.