லாகூர் கடாபி மைதனத்தில் நடைபெற்ற சம்பியன்கிண்ண அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய நியூஸிலாந்து 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. நியூஸிலாந்து வீரர்களான ரச்சின் 108 ஓட்டங்களும், வில்லியம்சன் 102 ஓட்டங்களும் அடித்தனர்.6 விக்கெற்களை இழந்த நியூஸிலாந்து 362 ஓட்டங்கள் எடுத்தது.
தென் ஆபிரிக்காவின் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 67 பந்துகளில் 100 ஓட்டங்கள் அடித்தார்.
தென் ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 312 ஓட்டங்கள் எடுத்தது.
சம்பியன் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து நியூஸிலாந்து விளையாட உள்ளது.