முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறு ஒரு படமாக தயாரிக்கப்பட உள்ளது அது மட்டுமன்றி ஒரு புத்தகமொன்றும் எழுதப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உறுதிப்படுத்தினார்.
வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டபோது, அதில் தனது குழந்தைப் பருவ விவரங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், நடிக்க விருப்பமுள்ள எவரும் இந்தப் பாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் கூறினார்.