இரண்டு விமானிகளை ஏற்றிச் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படையின் FA-50 போர் விமானம், இரவு மர்மமான முறையில் காணாமல் போனது.
அந்த விமானம் திங்கட்கிழமை நள்ளிரவில் மற்ற விமானப்படை பிரிவுகளுடன் கடைசியாக தொடர்பில் இருந்தது.
காணாமல் போன ஜெட் விமானம் மற்றும் விமானிகளைத் தேடும் பணி தொடர்கிறது
கம்யூனிஸ்ட் கொரில்லாக்களுக்கு எதிரான கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது போர் விமானம் காணாமல் போனதாக இராணுவ அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.