இலங்கை பொது வைத்திய நிபுணர் சங்கம் யாழ்ப்பாண மருத்துவர் சங்கம் இணைந்து நடத்திய தொற்றா நோய்கள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று புதன்கிழமை காலை பருத்தித்துறையிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
நீரிழிவு, உயர்குருதி அமுக்கம், கொலஸ்ரோல், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்நிலமைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர்களால் தெளிவுரைகள் வழங்கப்பட்டன.