Monday, February 17, 2025 11:58 pm
பொதுத்துறை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக முன்னோடி அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நவீன மற்றும் வசதியான பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் என நேற்று திங்கட்கிழமை (16) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு பெருநகரப் பகுதிக்குள் மூன்று முக்கிய சாலை வழித்தடங்களில் 100 ஏர்-சஸ்பென்ஷன், பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். அவற்றைக் கொள்வனவு செய்வதற்காக ரூபா 3,000 மில்லியன் ஒதுக்கீடுசெய்யப்படும்.
இலங்கை போக்குவரத்து சபை தனது சொந்த நிதியில் 200 பஸ்களை வாங்கும். இவை மெட்ரோ பஸ் கம்பனிகள் (Metro Bus Companies -MBC) எனப்படும் புதிதாக நிறுவப்பட்ட கம்பனிகளின் கீழ் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.