எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையேயான சந்திப்பு இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
எரிசக்தி அமைச்சருக்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி கூட்டாண்மையின் பல்வேறு அம்சங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறுகிறது.
முன்னதாக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையேஇடையே சமீபத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த பரந்த கருத்துப் பரிமாற்றம் நடந்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதானி நிறுவனம் இந்த நாட்டில் செயல்படுத்த முன்மொழிந்த திட்டங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சூழலில் இந்த விவாதங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.