Friday, February 14, 2025 12:16 am
மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்புக் குழுவால் மீட்கப்பட்ட அவர்கள் தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மரின் கரேன் பகுதியில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

