Tuesday, February 11, 2025 11:19 am
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திடீர் பயணமாக இன்று மாலை சென்னைக்கு செல்கிரார். ஆந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்லும் அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று மாலை ரயிலில் சென்னைக்குப் பயணமாவார். இதனை தொடர்ந்து சென்னையில் சில மணி நேரம் தங்கி விட்டு பிறகு மீண்டும் விமானம் மூலம் டெல்லிக்கு பயணிக்க இருக்கிறார்.
சென்னையில் சில மணி நேரம் தங்கி இருப்பதால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ராகுல் காந்தியின் சந்திப்பில் இது குறித்து விவாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

