பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய வழித்தடங்களில் குளிரூட்டப்பட்ட அலுவலக இரயில்கள் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த முயற்சிக்காக தற்போதுள்ள இயந்திரங்கள் , பெட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்து பயன்படுத்த திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர உறுதிப்படுத்தினார்
காலியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இரண்டு இரயில்கள், அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை , வெயாங்கொடையில் இருந்து கொழும்பு கோட்டை வரை ,நீர்கொழும்பில் இருந்து கொழும்பு கோட்டை வரை தலா ஒரு குளிரூட்டப்பட்ட இரயில் சேவை இயக்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டப்பட்ட இந்த இரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- ரக்பி பணிக்குழுவிலிருந்து இருவர் நீக்கம்
- அரசு மரியாதையுடன் மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு
- இளவரசர் வில்லியமின் வனவிலங்கு ஆவணத் தொடரில் இலங்கை
- பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி பொருத்த ஆலோசனை
- 16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா
- ரஷ்யாவில் இருந்து 390 உக்ரேனியர் நாடு திரும்பினர்
- மெலிந்த குழந்தையை காப்பாற்ற போராடும் தாய்
- ஜேர்மனியில் 18 பேரை கத்தியால் குத்திய பெண்