பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலில் இலங்கையில் முன்னணிப் பங்கு வகித்த சுகாதாரச் சேவைகள், மனித வள அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட ஒத்துழைப்பின் முக்கிய துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த இந்தத் துறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்திரமணி பாண்டே சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில் பிம்ஸ்டெக் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி ஏ. சாஜ் யு மெண்டிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் உதவி பணிப்பாளர் பிரார்த்தனா கௌஷலியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு