அரச ஊழியர்களி சம்பள உயர்வு வழங்கப்படும். கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே நேற்று சனிக்கிழமை [8] அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி தெரிவித்தார்.
ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளிலும் கல்வித் துறையிலும் உள்ள பல பிரச்சினைகள், இந்த சேவைகளில் பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில்முறை பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் (தேசிய மற்றும் மாகாண) முறையான இடமாற்றங்கள், பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்தல், நிதி வசூலித்தல், தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, புதிய கல்வி சீர்திருத்தங்கள் , பிரிவேனா அமைப்பில் உள்ள சிக்கல் நிலைகளை தீர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள்தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் போது, வெற்றிடங்கள் இல்லை எனில் மாணவர்களை சேர்க்காமல் இருத்தல், கல்வி அமைச்சு இதற்காக சிபாரிசு கடிதங்களை வழங்காது இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரசு பணியாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்தார்.
Trending
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு
- 24 மணி நேர கடவுச்சீட்டு சேவை நிறுத்தம்
- ஊழலற்ற மக்களாட்சியை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னம் வழங்கும்
- இலங்கை முழுவதும் காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ளது
- 1,000க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன
- ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு
- யாழில் போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது