யாழ்ப்பாணத்தில் சைவ சித்தாந்த வகுப்புகள் இலங்கை சைவநெறிக்கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை இந்துமாமன்றம், இலங்கை சைவசமயப்பேரவை அனுசரணையில் யாழ்ப்பாண இந்து மாமன்ற அலுவலக கட்டடத்தில் திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த வகுப்புகள் இன்று சனிக்கிழமை [8] சிறப்பாக நடைபெற்றது.
சித்தாந்தரத்தினம்,திருமுறைநெறிச்செல்வர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்த முதுகலைமாணி .ந.சிவபாலகணேசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்ததுறை மூத்த விரிவுரையாளரும்,
சித்தாந்தரத்தினம், சித்தாந்தச்செம்மல்,சிவஞானச் செழுமணி, சைவப்பண்டிதர், சைவப்புலவர் முதலிய சிவஞானவிருதுகளை உடையவருமான கலாநிதி இளையதம்பி ஜெயந்திரன்,
இலங்கை சைவசமயப்பேரவையின் தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாசாரியார் ஆகியோர் வகுப்புக்களை நெறிப்படுத்தினர்.
வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அடங்கிய (நான்கு பகுதிகளாக நான்கு புத்தகங்கள்) புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
