2020 ஆம் ஆண்டு ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.
வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 வை எடுக்க உள்ளதாக திடீர் அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. பின்னர் அந்த படத்தின் இயக்குனராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். சுந்தர் சி இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளதால் படத்தின் கமர்ஷியல் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியுள்ளது.
இந்த படத்துக்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் ஒதுகப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் படத்தில் புராணக் கால காட்சிகள் இடம்பெற உள்ளதாகவும் அதை படமாக்க சுந்தர் சி மிகப்பிரம்மாண்டமான காட்சிகளை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு