
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான கந்தையா பலேந்திரா தனது 85ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார்.
1940 ஆம் ஆண்டு பிறந்த இவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மிகப்பெரும் நிறுவனமான John Keells இன் முதல் இலங்கைத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.
பிரண்டிக்ஸ் லங்கா லிமிடெட் மற்றும் கொமன்வெல்த் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.