
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்புவிழாவும்,பச்சிலை’ மலர் வெளியீடும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை பிரதேச சபையின் செயலர் திருமதி த.தர்சினி தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர், பரிசில்களை வழங்கி வைத்ததுடன், ‘பச்சிலை’ நூலையும் வெளியிட்டு வைத்தார்.
இந்த வைபவத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் த.ஜெயசீலன், கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.சத்தியராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.