சுக்கிரன் பெயர்ச்சி: செல்வ செழிப்புக்கு அதிபதியான சுக்கிரன் ஜனவரி 28 ஆம் தேதி மீன ராசியில் பிரவேசம் செய்து மே 31 ஆம் தேதி வரை உச்ச ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். சுக்கிரன் தன்னுடைய ராசியில் 123 நாட்கள் இருப்பார். இந்த நேரத்தில் சுக்கிரனின் நிலையால் பல ராசிகளுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
சுக்கிரனின் இந்த மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் எந்தவிதமான யோகங்களை உண்டாக்கும். எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்வோம்..
துலாம்: சுக்கிரனின் இந்த மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்திலும், வேலை செய்யும் இடங்களிலும் பெண்களுடன் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதுபோன்ற தகராறுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய நடவடிக்கையில் பொறுமையை காப்பது நன்மை பயக்கும். உங்களைக் குறித்து நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்வதற்கான நேரமாக அமையும்.
விருச்சிகம்: சுக்கிரனின் நிலை மாற்றத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நண்பர்கள், உறவுகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரத்தில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உண்டாகும். புதிய வகை வருமான ஆதாரங்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுடைய இலக்குகள் மற்றும் இலட்சியங்கள் நிறேவேறும் காலமாக அமையும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு யோகம் தரும் காலமாக இது அமையும். வாகனம் மற்றும் துணிகளை வாங்குவதற்கான அமோகமான காலமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இனிமையான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு உண்டாகும். நிதி சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். மன நிம்மதி பிறக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும். வருமானத்தைப் பெருக்குவதற்கான ஆதாரங்களை வளர்த்துக் கொள்வதற்கான அமோகமான காலமாக இருக்கும். உங்களுடைய கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் ஆதாயம் அடைவீர்கள். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுடைய தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்ற காலமாக இருக்கும். தொழில், வியாபாரம், வேலையில் அதிக லாபத்தைப பெற வேண்டும் எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு அருமையான காலமாக இருக்கும். உங்களுடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான காலமாக இருக்கும். உங்களுடைய தகவல் தொடர்புத் திறனால் நற்பலன்களைப் பெறுவீர்கள். இதன் மூலம் பிரபலமடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சமுதாயத்தில் மதிப்பைப் பெறுவீர்கள். தொழிலில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சுப நிகழ்வுகள் நடைபெறும் காலமாக இருக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வசீகரமாக காணப்படுவீர்கள். உங்களுடைய வசதி வாய்ப்புகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். சுக்கிரனின் அருளால் புகழையும், பாராட்டையும் பெறுவீர்கள். பெண்கள் மத்தியில் நீங்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலால் கவனத்தை ஈர்ப்பீர்கள்.