ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) பிமல் பெரேராவை துணை பொது முகாமையாளராகவும் மற்றும் தலைமை வளர்ச்சி அதிகாரியாகவும், சந்திம குரேயை துணை பொது முகாமையாளராகவும் மற்றும் தலைமை புத்தாக்க அதிகாரியாகவும் நியமித்துள்ளது. இந்த சிரேஷ்ட தலைமைக் குழுவில் இந்த புதிய நியமனங்கள் வங்கியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், இன்றைய மாறும் வணிகச் சூழலில் புத்தாக்கத்தை முன்னெடுப்பதற்கும் உள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றன.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பெருநிறுவன மூலோபாயம், முதலீட்டு நிதி, இடர் முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் நிதிச் சேவைகளில் விரிவான நிபுணத்துவத்துடன் பிமல் பெரேரா HNB இல் இணைந்தார்.வங்கியின் வணிக மாதிரியில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
சந்திம குரே 25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு தொலைநோக்கு தலைவர் ஆவார். அவர் சிக்கலான வணிக சவால்களைத் தீர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார். தனது புத்தாக்கமான மனநிலை மற்றும் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு பெயர் பெற்ற குரே, தொழில்துறைகள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.