Thursday, July 16, 2026 9:56 am
இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் . 414 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 33 வது நாளான நேற்று (15) , 2 மனித எலும்பு குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 2 சிறுவர்களின் எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 414 மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் இதுவரையில் 414 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதில் அவற்றுள் 409 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு , அடையாளம் இடப்பட்டு , அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி நேற்று (15) ஆரம்பமாகி , 56 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

