Friday, June 26, 2026 3:48 pm
யாழ். சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி நீக்கப்பட்டு உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமும் , கடையடைப்பும் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோரை உப தவிசாளரின் பதவியை நீக்கியும் , நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் , குறித்த சம்பவத்தை கண்டித்தும் , நீதி கோரியும் சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று முழு நாள் கடையடைப்பு செய்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் , சுரேஷ் பிரேமசந்திரன் , தர்மலிங்கம் சித்தார்த்தன் , வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் , வர்த்தகர்கள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

