Wednesday, May 20, 2026 11:57 am
பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்க தயார் நிலையில் இருந்த தனியார் பேருந்து ஒன்றின் சில் ஒன்றில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இன்று புதன்கிழமை (20) காலை 09.30.மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்க தயார் நிலையில் இருந்த தனியார் பேருந்தினை இயக்க செய்து விட்டு பேருந்தில் இருந்து சாரதி இறங்கியுள்ளதாகவும், தயார் நிலையில் இருந்த பேருந்தில் உள்ள தடையாளி இயங்காததன் காரணமாக பேருந்துக்கு முன்னால் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது பேருந்தின் சில் ஏறி சம்பவ இடத்திலேயே இளைஞன் பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞன் குழாய் நீர் அகழும் வேலைத்திட்டத்திற்காக வவுனியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதிக்கு வருகை தந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இளைஞனின் சடலம் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

