Monday, January 26, 2026 4:12 pm
2025/2026 ம் ஆண்டிற்கான கல்வி பொது தர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சை எழுத உள்ள மாணவர்களிற்கான செயலமர்வுகள் சிகரம் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

தமிழ் மற்றும் கணித பாடச் செயலமர்வுகள் சிகரம் நிறுவனத்தின் அனுசரணையுடன் செம்பியன்பற்றுத் தெற்கு வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தில் நேற்று இடம்பெற்றது.
மேலும் பல இடங்களில் குறித்த அமைப்பினால் செயலமர்வுகள் இடம்பெறவுள்ளன.

