Monday, January 26, 2026 12:03 pm
11 வயதுக்குட்பட்ட உலக தரவரிசை மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர இன்று நாடு திரும்பினார்.
தாவி சமரவீர ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பஹ்ரைனில் நடைபெற்ற தொடரில் வெற்றி பெற்று அதில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அதேபோன்று கட்டார் நாட்டின் டொஹா நகரில் ஜனவரி 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கனிஷ்ட மேசைப்பந்து தொடரின் 11 வயதுக்குட்பட்ட பிரிவிலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.
தாவி சமரவீரவின் பயிற்சியாளராக அவரது தந்தையான ஹசித சமரவீர செயற்படுகிறார்.
தாவி சமரவீர 11 வயதுக்குட்பட்ட மேசைப்பந்து வீரர்களுக்கான உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

