Monday, January 26, 2026 10:07 am
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திவை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு எதிராக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவு ஜனவரி 15ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டினர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவரை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க நீதவான் அனுமதி அளித்தார்.
மேலும் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

