Friday, January 23, 2026 4:39 pm
வடமராட்சி, பருத்தித்துறையிலிருந்து நெல்லியடி நோக்கி சென்ற ஆட்டோவும், மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறையிலிருந்து ஒரே திசையில் குறித்த ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் பயணித்துள்ளது. பிரதான வீதியிலிருந்து வளைவு ஒன்றினுள் திடீரென ஆட்டோ திரும்பியதால் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ஆட்டோ மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

