Friday, January 23, 2026 2:37 pm
நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை பல பகுதிகளில் துகள் உறைபனி (Frost) பொழிவு ஏற்பட்டுள்ளது. கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளதால் அவர்களின் வருகை எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.
குறிப்பாக நுவரெலியா குதிரைப் பந்தயத் திடல், கிரகரி வாவியின் கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் துகள் உறைபனி காணப்படுகிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலை நேரங்களில் நேரில் பார்வையிட்டு, புகைப்படங்கள் எடுத்தும் ஆச்சரியத்துடன் ரசித்தும் வருகின்றனர்.

இந்நாட்களில் மலையகப் பகுதிகளில் இரவு நேரங்களில் கடும் குளிரான காலநிலையும், பிற்பகல் நேரங்களில் கடும் வெப்பமான காலநிலையும் நிலவுகிறது.


