Friday, January 23, 2026 2:10 pm
முன்னாள் அமைச்சின் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 மில்லியன் ரூபாயை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறியதற்காக அனுஷ பெல்பிட்ட கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் பெல்பிட்ட ஆஜரானபோது, அவரது ஆரம்ப வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட அனுஷ பெல்பிட்ட கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

