Friday, January 23, 2026 10:44 am
இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப் பெருமஞ்சத் திருவிழா, தேசிய நிகழ்வாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூச தின உலகப் பெருமஞ்சத் திருவிழா எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த திருவிழாவின் ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இணுவில் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதன்போது குடிநீர், சுகாதாரம், வீதி தடைகள், வாகனப் பாதுகாப்பு நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலில் மல்லாகம் நீதிமன்ற பதிவாளர், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ், கலாநிதி ஆறு திருமுருகன், பொலிஸார், ஆலய குருக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


