Thursday, January 22, 2026 3:53 pm
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே இன்னும் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.
த.வெ.க. ஒரு பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், 234 தொகுதிகளிலும் போட்டியிட ஏதுவாக ‘பொதுச் சின்னம்’ கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
கட்சித் தலைமை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சுமார் 10 விருப்பச் சின்னங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
10 விருப்பச் சின்னங்களில் விசில், ஆட்டோ, மட்டைப்பந்து , மடிக்கணினி, கப்பல், மைக்ரோஃபோன் போன்றவை முக்கியமாக இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது.

