Thursday, January 22, 2026 1:40 pm
ஜனவரி 26ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வன்னி உட்பட வடக்கு கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கோரிக்கைக்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் கே.டீ. லால்காந்த இதனைக் கூறியுள்ளார்.

