Thursday, January 22, 2026 1:15 pm
உலகத் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் 98வது ஒஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
நடிகை டானியல் புரூக்ஸ் மற்றும் நடிகர் லூயிஸ் புல்மேன் ஆகியோர் நேரலையில் இந்தப் பரிந்துரைகளை வெளியிட உள்ளனர்.
லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த ஒன் பேட்டில் ஆஃப்டர் எனதர் (One Battle After Another) படம் அதிகப்படியான பரிந்துரைகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த படம், இயக்குனர் (போல் தோமஸ் ஆண்டர்சன்) மற்றும் சிறந்த நடிகர் என பல முக்கிய பிரிவுகளில் இந்தப் படம் முன்னிலையில் உள்ளது.
ரையன் கூக்லரின் ‘சின்னர்ஸ்’ (Sinners) திரைப்படம் சுமார் 15 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு புதிய சாதனை படைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
நெட்ஃபிக்ஸ் தயாரிப்பான ‘KPop Demon Hunters’ மற்றும் ஒரு பில்லியன் டொலர் வசூலித்த ‘Zootopia 2’ ஆகியவற்றுக்கிடையே சிறந்த அனிமேஷன் படத்திற்கான கடும் போட்டி நிலவுகிறது.
இந்த ஆண்டு முதல் சிறந்த நடிகத் தேர்வு என்ற புதிய விருது அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஒஸ்கார் விருது வழங்கும் விழா 2026 மார்ச் 15 நடைபெற உள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரையன் இந்த விழாவைத் தொகுத்து வழங்குகிறார்.

