Thursday, January 22, 2026 12:10 pm
நுவரெலியாவில் இன்று வியாழக்கிழமை 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பண்டாரவளையில் 11.5 °C ஆகவும், பதுளையில் 15.1 °C ஆகவும், கட்டுகஸ்தோட்டையில் 15.9 °C ஆகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை முல்லைத்தீவில் 25.3 °C ஆகவும், ஹம்பாந்தோட்டையில் 22°C ஆகவும், கொழும்பில் 22.1°C ஆகவும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

