Thursday, January 22, 2026 10:59 am
பருத்தித்துறை மருதங்கேணி வீதி வலிக்கண்டி சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிரதான வீதியில் வந்த மோட்டார் சைக்கிளும், இணைப்பு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பருத்தித்துறையை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அடங்குகின்றார்.
விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

