Wednesday, January 21, 2026 4:12 pm
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா, வெனிசுலா மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளை அமெரிக்காவின் மாகாணங்களாக காட்டும் வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனது சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்காவின் வரைபடம் ஒன்றை வெளியிட்டு அதில் கனடா, வெனிசுலா மற்றும் கிரீன்லாந்து ஆகியவை அமெரிக்காவின் மாகாணங்களாக காட்டுவதாக அமைந்துள்ளது. அவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வரைபடம் வெளியான சில நிமிடங்களில், மற்றொரு புகைப்படத்தை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

அதில், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார் கோ ரூபியோ ஆகியோருடன் ட்ரம்ப், அமெரிக்க கொடியை கிரீன்லாந்தில் நடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வரைபடத்துக்கு பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இறையாண்மை கொண்ட ஒரு நாட்டை அவமதிக்கும் செயல் என கனடாவும் அமெரிக்க கொடியின் கீழ் மெக்சிக்கோவும் உள்ளது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதால் மெக்சிக்கோவும் தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
நாங்கள் அடிமைகள் அல்ல, அண்டை நாடு என மெக்சிக்கோ கூறியுள்ளது. தற்போதைய வரைபடம் குறித்து டென்மார்க், தூதரக ரீதியாக தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

