Tuesday, January 20, 2026 1:03 pm
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் தமக்குக் கிடைக்கும் தகவல்களை நேரடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்குவதற்கான விசேட தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான இரகசியத் தகவல்களை அந்தந்தப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிப்பதன் மூலம் குற்றவாளிகளைக் கைது செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
கம்பஹா மாவட்டம்: 071 8591608, கொழும்பு வடக்கு: 071 8591565, காலி மாவட்டம்: 071 8591452
தகவல் வழங்குவோரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும், போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க இந்த விசேட பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

