Tuesday, January 20, 2026 11:38 am
வலண்டினோ (Valentino) என அழைக்கப்படும் இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் வலண்டினோ கரவானி தனது 93 வது வயதில் காலமானார்.
“அவர் தனது குடும்பத்தினரின் அன்புக்கு மத்தியில் ரோமில் உள்ள தனது இல்லத்தில் அமைதியாக உயிரிழந்தார்” என வலண்டினோ கரவானி மற்றும் ஜியான்கார்லோ ஜியாமெட்டி அறக்கட்டளை (Valentino Garavani and Giancarlo Giammetti Foundation) இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பியாஸ்ஸா மிக்னனெல்லியில் (Piazza Mignanelli) வலண்டினோவின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அதற்கு மறுநாள் Basilica of Saint Mary of the Angels and Martyrsயில் வலண்டினோவின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.

