Tuesday, January 20, 2026 11:02 am
28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது குருநாகல், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரருடன் குறித்த சந்தேக நபர் தொலைபேசியூடாக தொடர்புகளைப் பேணியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 28 கோடியே 33 இலட்சம் ரூபாய் பணமும், 02 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபரை குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

