Monday, January 19, 2026 2:55 pm
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளது. இந்திய அணி ஒரு போட்டியிலும், நியூசிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தன.
இந்நிலையில் 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 337 ஓட்டங்களைப் பெற்றது. 338 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.
108 பந்துகளை எதிர்கொண்ட கோலி சதம் கடந்து 124 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். இது சர்வதேச அரங்கில் அவர் அடித்த 85 ஆவது சதமாகும். ஒருநாள் போட்டித் தொடர்களில் இது கோலியின் 54 ஆவது சதமாகும்.
இந்திய அணி 46 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 41 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இதன்மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற அடிப்படையில் நியூசிலாந்து அணி தொடரை முதன்முறையாக இந்திய மண்ணில் கைப்பற்றியது.
தொடர் மற்றும் ஆட்டநாயகனாக டெர்ல் மிட்செல் தெரிவானார்.


