Monday, January 19, 2026 12:54 pm
கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார்.
3.2 பில்லியன் ரூபா செலவில் 321 மீற்றர் நீளத்தில், 11 மீற்றர் அகலத்தில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திறப்பு விழாவில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


