Monday, January 19, 2026 12:20 pm
தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக புகையிரதம் (High-speed trains) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அவசர நோய்காவு வண்டிகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சிதைந்த பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

