Friday, January 16, 2026 3:32 pm
வெனிசியூலாவின் மற்றுமொரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
வெரோனிகா’ எனப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், நேற்று (15) அதிகாலை கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் கடற்பரப்பில் எவ்வித மோதலும் இன்றி குறித்த கப்பலை கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் ( Kristi Noem), குறித்த கப்பல் ட்ரம்பின் தடை உத்தரவை மீறி செயற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

