Friday, January 16, 2026 3:01 pm
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களும் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர்.
இரு அமெரிக்கர்கள், ஒரு ஜப்பானியர், ஒரு ரஷ்யர் ஆகியோர் இவர்களில் உள்ளடங்குகின்றனர்.
இந்த விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான மருத்துவப் பிரச்சினை காரணமாக அவர்களின் விண்வெளித் தங்குதல் ஒரு மாதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதிலிருந்து மருத்துவப் பிரச்சினை காரணமாக விண்வெளிவீரர்கள் திரும்ப அழைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

