Wednesday, January 14, 2026 11:11 am
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் மிகத் தீவிரமாக பரவி வருவதாக மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வெள்ள நீருக்குள் நடமாடியவர்கள், வயல் நிலங்களுக்குள் பணி செய்தவர்கள் இந்த நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த எச்சரிக்கையினை சுகாதார திணைக்களத்தின் ஊடாக பொதுமக்களுக்கு விடுத்துள்ளதுடன் தடுப்பு நடவடிக்கைகளையும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக எடுத்து வருவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

