Wednesday, January 14, 2026 11:03 am
அரசாங்க சேவைக்கு புதிதாக 26 ஆயிரத்து 95 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி 23ஆயிரத்து 344 ஆசிரியர்களும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை 2026 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

