Tuesday, January 13, 2026 2:17 pm
கடுவெல – கொள்ளுப்பிட்டி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் ஆயுதமொன்றை பயன்படுத்தி பல வாகனங்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கடை காவல் நிலைய அதிகாரிகள் சந்தேக நபரைத் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரின் தாக்குதலில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ராகமத்தைச் சேர்ந்த 29 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

