Tuesday, January 13, 2026 12:43 pm
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு கப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிக் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி கந்தசுவாமி கோவில் சந்திப்பகுதியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இன்று காலை வாகனத்தை மீட்ட கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

