Tuesday, January 13, 2026 10:18 am
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
சிபிஐ அதிகாரிகள் 4 பேர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் மட்டும் தனியாக விசாரணை நடத்தியதாகவும், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டமைக்கு அமைவாக விஜயிடம் இன்று நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஆஜராக வேண்டிய திகதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விஜய்யிடம் நேற்று 7 மணி நேர விசாரணை நடத்தப்பட்டது.

